For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

எவரெஸ்ட்டை விட இரு பெரிய சிகரங்கள் கண்டுபிடிப்பு? நெதர்லாந்து விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல் - சிறப்பு கட்டுரை!

07:00 PM Jan 26, 2025 IST | Sivasubramanian P
எவரெஸ்ட்டை விட இரு பெரிய சிகரங்கள் கண்டுபிடிப்பு  நெதர்லாந்து விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்   சிறப்பு கட்டுரை

உலகின் உயரமான சிகரமாக கருதப்படும் எவரஸ்ட்டை விட 100 மடங்கு உயருமுள்ள இரு சிகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி (EDMUND HILLARI) மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நோர்கே (TENZING NORGE) ஆகியோர் 1953-ம் ஆண்டு முதன்முதலில் எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர். அன்றிலிருந்து 8 ஆயிரத்து 849 மீட்டர் உயரம் கொண்ட எவரஸ்ட் சிகரத்தின் உச்சத்தை எட்டுவதே, உலகின் பல தீவிர மலையேறுபவர்களின் இலக்காக இருந்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

Advertisement

ஆனால், அதைவிட 100 மடங்கு உயரமுள்ள இரு ரகசிய சிகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் நெதர்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒரு கண்டத்தின் அளவிலான இதுபோன்ற தீவுகளை நமது கிரகத்தில் எங்கும் காண முடியாது என தெரிவித்த விஞ்ஞானிகள், அவை சுமார் 620 மைல், அதாவது ஏறக்குறைய ஆயிரம் கிலோ மீட்டர் உயரம் கொண்ட மலைத்தொடர்களை உள்ளடக்கி இருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர்.

இவை எவரஸ்ட் சிகரத்தின் புகழை மங்கச்செய்யுமா என்ற கேள்வியை பலரிடம் எழுப்பியது.

Advertisement

இந்நிலையில், நெதர்லாந்தின் உச்ரெட்ச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்டுள்ள புதிய தகவல் மலையேறும் சாகங்களை மேற்கொள்வோரின் குழப்பத்தை போக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், ஏனென்றால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரு மலை சிகரங்களும் பூமியின் மேற்பரப்பில் இல்லை என்பதை விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அந்த இரு பெரும் சிகரங்களும் நமது கால்களுக்கு அடியில் சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் புதையுண்டிருப்பதாகக்கூறி, அது குறித்த பல விவரங்களையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, ஆப்ரிக்க கண்டத்திற்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் அடியில் அமைந்துள்ள அந்த இரு அமைப்புகள், பூமியின் மையப்பகுதிக்கும், மேற்பரப்புக்கும் இடையிலான எல்லைப்பகுதிகளில் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதையுண்டு கிடக்கும் இரு பெரும் சிகரங்களும் அரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்போ அல்லது பூமி தோன்றியதாக கருதப்படும் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்போ கூட தோன்றியதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.

SUBDUCTION என்ற செயல்பாடு மூலம் மேற்பரப்பில் இருந்து கீழே தள்ளப்பட்டுள்ள அந்த அமைப்பைச் சுற்றி, TECTONIC தகடுகளால் மூடப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் MANTLE பகுதியில் அமைந்துள்ள LARGE LOW SEISMIC VELOCITY PROVINCES (LLSVP) என்றழைக்கப்படும் இந்த அமைப்புகள் குறித்து தசாப்தங்களை கடந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், பூமியின் மேற்பரப்பை விடவும் இந்த அமைப்புகள் பல மடங்கு வெப்பமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மற்றொரு தரப்பு விஞ்ஞானிகள் இந்த இரு அமைப்புகளும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன், பூமியின் மீது மோதிய மற்றொரு கிரகத்தின் மிச்சங்களாக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ நம்ம எவரஸ்ட் சிகரத்தோட புகழுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதுதான் இப்போதைக்கு பாயிண்ட்.

Advertisement
Tags :
Advertisement