ஏமனில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் சென்ற விமானத்தின் மீது தாக்குதல் - ஐ.நா. கண்டனம்!
12:13 PM Dec 27, 2024 IST | Murugesan M
ஏமனில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் சென்ற விமானத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளாார்.
ஏமனின் சனா விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவத்திற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Advertisement
ஐநா பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சர்வதேச சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான பணியாளர்கள் ஒருபோதும் குறிவைக்கப்படக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement