ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குறைந்த நீர்வரத்து - பரிசல் இயக்க அனுமதி!
02:59 PM Dec 05, 2024 IST | Murugesan M
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
Advertisement
தற்போது, மழை குறைந்ததால் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி என்ற அளவில் உள்ளது. இதனால், சின்னாறு முதல் கோத்திகள் பாறை வரை பரிசில் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் அருவியில் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.
Advertisement
Advertisement