For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்தின் மூலம் இந்திய ஆராய்ச்சிகள் புது வடிவம் பெறும் - வெளிநாட்டினர் வரவேற்பு!

10:25 AM Dec 05, 2024 IST | Murugesan M
ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்தின் மூலம் இந்திய ஆராய்ச்சிகள் புது வடிவம் பெறும்   வெளிநாட்டினர் வரவேற்பு

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்தின் மூலம் இந்திய ஆராய்ச்சிகள் புது வடிவம் பெறும் என்று வெளிநாட்டினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 25-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன்படி அடுத்த 3 ஆண்டுகளுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

Advertisement

இத்திட்டத்தின் கீழ் சுமார் 13 ஆயிரம் இதழ்களை உயர்க் கல்வி பயிலும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் இலவசமாக படிக்க முடியும்.

இதற்கு வெளிநாட்டினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எக்ஸ் தளத்தில் பயனாளி ஒருவர், பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவையை, தான் மிகவும் விரும்புவதாக பதிவிட்டுள்ளார்.

Advertisement

ஊழல் நிறைந்த, முந்தைய அரசுகள் ஏற்படுத்திவிட்டு சென்ற குழப்பத்தை சமாளிக்கும் விஷயத்தில் பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவையும் முதன்மை உதாரணங்களாக திகழ்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி உண்மையில் ஒரு விதிவிலக்கான தலைவர் என்றும் பதிவிட்டுள்ளார். .

Advertisement
Tags :
Advertisement