ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி மத்திய அரசு மக்களுக்கு உரிய முறையில் விளக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.
சென்னை பல்லவன் இல்லம் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். குறிப்பாக, அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி மத்திய அரசு மக்களுக்கு உரிய முறையில் விளக்க வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் திமுக-வின் நிலைபாடு ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை எனவும் தெரிவித்தார்.