ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் மக்களை திமுக ஏமாற்ற வேண்டாம் - ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தால் மாநில உரிமைகள் பறி போகும் என மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அறிவிப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்றும், இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சியாலே சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் தனித்தனியாக நடந்ததாக தெரிவத்தார்.
அரசியல் கட்சிகளின் விரோத போக்கை மாற்றவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்றும், நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்றும் அவர் கூறினார்.
அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்ட பின்பு தான் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், பாராளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்டால் செயல்பாட்டிற்கு விரைவில் வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்வரின் தகப்பனார் ஆதரித்த சட்டத்தை முதல்வரே எதிர்க்கிறார் என்றும், மாநில உரிமைகள் பறிபோகும் என மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் ஹெச்.ராஜா கேட்டுககொண்டார்.