For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

'ஓ மை காட்' என கூறி வருத்தம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!

03:42 PM Dec 09, 2024 IST | Murugesan M
 ஓ மை காட்  என கூறி வருத்தம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததற்கு ஓ மை காட் என கூறி நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார்.

கூலி திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜெய்பூரில் நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக, நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.

Advertisement

சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்து விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வழங்கி அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர், அப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் பெருமழையால்
திருவண்ணாமலையில் நிலசரவில் ஏழு பேர் இறந்தது குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் ஓ மை காட் என்று வருத்தம் தெரிவித்தார்.

Advertisement

மேலும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேறீர்களா என்று கேள்வி எழுப்பியதற்கு ஆமாம் படப்பிடிப்பில் பங்கேற்கிறேன் என்று தெரிவித்தார்.

Advertisement
Tags :
Advertisement