For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கடலில் சிக்கிய மீனவர்கள் - ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு!

10:49 AM Nov 29, 2024 IST | Murugesan M
கடலில் சிக்கிய மீனவர்கள்   ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு

கடலில் சிக்கிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது.

Advertisement

இந்நிலையில், எச்சரிக்கையை மீறி கடலூர் தோனித்துறை கிராமத்தை சேர்ந்த 6 மீனவர்கள் நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது கடல் சீற்றத்தால் அவர்களது படகு கவிழ்ந்த நிலையில், 6 மீனவர்களும் அருகில் இருந்த கப்பல் இறங்குதளத்தில் ஏறி உயிர் தப்பினர்.

தொடர்ந்து கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் அவர்களை மீட்பதில் 2 நாட்களாக சிக்கல் நீடித்தது. இந்நிலையில், கடலோர காவல்படையினரின் ஹெலிகாப்டர் மூலம் 6 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement