கடலோர பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசும்! : பாலச்சந்திரன்
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் எனவும், அது தமிழக கடற்கரைக்கு இணையாக 100 முதல் 150 கி.மீ தொலைவில் நிலை கொள்ளும் எனவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசியவர்,
நேற்று தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது இதை தொடர்ந்து நாளை வடமேற்கு திசை நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும்.
அதைத்தொடர்ந்து தமிழக கடற்கரைப் பகுதியை நோக்கி நகரக்கூடும் இதனைத் தொடர்ந்து தமிழக கடலோர பகுதிகளில் மழை தொடரும்.
கனமழை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகன மழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்தார்.
27 ஆம் தேதி புதுச்சேரி கடலூர் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிட இடங்களில் அதிக கனமழையும் திருவள்ளூர் தொடங்கி புதுக்கோட்டை வரையிலான வடகடலோர மாவட்டங்களில் ஓரிடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
28ஆம் தேதி திருவள்ளூர் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி கடலூர் ஒரு வருடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
29ஆம் தேதி திருவள்ளூர் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை கன வாய்ப்பு இருக்கிறது.
மன்னார் வளைகுடா தமிழக கடற்கரை ஒட்டி உள்ள பகுதிகளில் மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
28 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் அவ்வப்போது 90 km வேகத்தில் வீசப்படும்.
தரைக்காற்றைப் பொறுத்தவரையில் நாளையும் நாளை மறுநாளும் தமிழக கடற்கரை ஒட்டி உள்ள பகுதிகளில் தரைக்காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
ஆழ்கடலில் இருக்கின்ற மீனவர்கள் கரைக்கு திரும்பமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 328 மில்லி மீட்டர் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரை காலகட்டத்தில் இந்த காலகட்டத்தில் இயல்பளவு 337 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடலோர பகுதிகளுக்கு இணையாக சுமார் 150 இருந்து 200 கிலோமீட்டர் நிலைக்கொண்டிருக்கும். கரை கடப்பது பற்றி இன்னும் தகவல் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார்.