கடல் சீற்றம் - 2-வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்!
கடல் சீற்றம் காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நேற்று முதல் சூறைக்காற்று வீசி வருவதால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி மறு உத்தரவு வரும் வரை மீனவா்கள், கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல மீனவா் நலத் துறை தடை விதித்தது.
இதன் காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் அந்தந்த மீன் பிடி இறங்கு தளங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் முடங்கி உள்ளனர். காற்றின் வேகம் காரணமாக வங்கக் கடலில் நீா் மட்டம் உயா்ந்து காணப்படுகிறது.