கனமழை - கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய வட்டங்களில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியை பொறுத்தவரை உதகை, கூடலூர் தாலுகாக்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கனமழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.