கனிம வளங்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு : அணிவகுத்து நின்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள்!
05:35 PM Jan 23, 2025 IST | Murugesan M
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், சாலையோரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுந்து நிற்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்களில் கனிமவளங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.
Advertisement
இதற்கான அனுமதி சீட்டு வழங்குவதில் போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இந்நிலையில், கனிமவளங்களை எடுத்து செல்லும் வாகனங்கள் கண்டிப்பாக எடை மேடையில் எடை போட்டு சோதித்த பிறகு செல்ல வேண்டும் என்று போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதனால் சித்திரங்கோடு, குலசேகரம் சாலையோரம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement