கயானா கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் - பேட் பரிசளித்த வீரர்கள்!
கயானாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். இறுதியாக கயானா நாட்டுக்கு சென்ற அவர் அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணி வீரர்களை சந்தித்து பேசினார்.
அப்போது வீரர்கள் இணைந்து பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்தனர். இதுகுறித்து தனது சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவு ஆழமானது மற்றும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் நடைபெற்ற மகிழ்ச்சியான உரையாடல், இரு நாடுகளுக்கிடையேயான நெருக்கமான உறவை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.