கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்களே ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும்! - எடப்பாடி பழனிசாமி
10:05 AM Nov 25, 2024 IST
|
Murugesan M
திமுக இடையூறு அளிக்கும் போதெல்லாம் அதிமுக வெற்றி கண்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னை வானகரத்தில் நடைபெற்ற ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர்,
அதிமுகவை தொடங்கியபோது எம்ஜிஆர்-க்கு கருணாநிதி எவ்வளவு இடையூறுகளைக் கொடுத்தாரோ அதைவிட எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பல வகைகளில் இடையூறு செய்தாக கூறினார்.
இப்போதும் கூட திமுகவால் பல இடையூறுகளை சந்தித்து வருவதாகவும், அதிமுகவை முடக்க நினைப்போரின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கருணாநிதியின் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் திமுகவுக்கு தலைவர்கள் ஆக முடியும் என்றும், ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும் எனவும் அவர் விமர்சித்தார்.
Advertisement
Advertisement
Next Article