காசநோய் விழிப்புணர்வு - டெல்லியில் எம்பிக்கள் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி!
காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் டெல்லியில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
அடுத்த ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதையொட்டி காசநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இடையே டெல்லி தயான் சந்த் கிரிக்கெட் மைதானத்தில் நட்பு ரீதியாக கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
போட்டியை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பேட்டிங் செய்து தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. அனுராதா தாக்குர், சர்வதேச அளவில் 2030-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் அடுத்த ஆண்டே காசநோயை முற்றிலும் ஒழித்து விடுவோம் என்றும் சூளுரைத்தார். காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதை அனுராதா தாக்குர் சுட்டிக்காட்டினார்.