காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தேசிய விழாவாக கொண்டாடப்படுகிறது! : ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமத்தின் 3-ம் ஆண்டு முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை தரமணியில் நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மாபெரும் தேசிய விழாவாக கொண்டாடப்பட்டு வருவதாகவும் இதற்காக இதுவரை 21 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
கை, கால் என உறுப்புகள் பிரிந்தால் உடல் முழுமை அடையாது என்பதுபோல் மாநிலங்கள் பிரிந்தால் பாரதம் ஒன்றிணைய முடியாது எனவும் குறிப்பிட்டார். எனவே பாரதத்தை இணைப்பதில் காசி தமிழ் சங்கமம் நிகழ்வு முக்கிய பங்காற்றும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பழமை மாறாமல் தொடர்ந்து நடைபெறும் எனக் கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு எனவும் குறிப்பிட்டார்.