காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாமி தரிசனம்!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாமி தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற அவருக்கு நிர்வாகம் சார்பில் வரறேப்பு அளிக்கப்பட்டது. பின்னர் காமாட்சி அம்மனை தரிசனம் செய்தார்.. இதனையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் விபூதி, குங்கும பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பின்னர் சங்கர மடத்திற்கு சென்ற அவர், முக்தியடைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிர்ஷ்டானத்தில் அமர்ந்து தரிசனம் செய்தார். மத்திய அமைச்சருக்கு விபூதி, குங்கும, மலர்கள் அடங்கிய பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பின்னர் அதிர்ஷ்டானத்தை சுற்றி வந்த அவர், முக்தி அடைந்த சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருள் உரைப்படி 40 வருடங்களாக நடக்கும் சதஸ் எனும் வேதங்கள் பற்றிய புரிதலில் கலந்து கொண்டார்.