For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

காரைக்கால் மீனவர்களை யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதர் சந்தித்து ஆறுதல்!

06:29 PM Jan 28, 2025 IST | Murugesan M
காரைக்கால் மீனவர்களை யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதர் சந்தித்து ஆறுதல்

இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காரைக்கால் மீனவர்களை யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டத்தில் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த வேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், 13 மீனவர்கள் உரிய அனுமதிச் சீட்டு பெற்று மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

Advertisement

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை நோக்கி, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, 13 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தததுடன், விசைப்படகையும் சிறை பிடித்தனர். இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காரைக்கால் மீனவர்களை, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதர் 'சாய் முரளி' சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Advertisement

இதனிடையே, காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு எதிராக டெல்லியில் உள்ள இலங்கை தூதரக ஆணையருக்கு சம்மன் அனுப்பி, நேரில் வரவழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement