கார்த்திகை தீபத்திருவிழா - பூக்கள் விலை இரு மடங்கு உயர்வு!
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பூக்கள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த சந்தையில் இருந்து பூ வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் விற்பனை மற்றும் தங்கள் பூக்களை மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையில் வாங்கிச்செல்கின்றனர்.
இந்நிலையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் சந்தையில் பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது, நேற்று 1000 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று ஒரு கிலோ 2000ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் 1500ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
பிச்சிப்பூ, முல்லைப்பூ 500ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று கிலோ 1000 ரூபாய்க்கும், அரளிப்பூ 500 ரூபாய்க்கும், செவ்வந்தி, துளசி, செண்டுப் பூ ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, பெங்களூர் ரோஸ் மஞ்சள், சிவப்பு நிற ரோஸ் பூக்கள் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மழை மற்றும் பனியின் காரணமாக பூக்கள் விளைச்சல் பாதித்துள்ள நிலையில், பூக்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.