For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் - வானிலை மையம் தகவல்!

06:40 PM Dec 21, 2024 IST | Murugesan M
காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும்   வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று படிப்படியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் கிழக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும்,விசாகப்பட்டினத்தில் இருந்து தென் - தென்கிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே 490 கிலோ மீட்டர் தொலைவிலும், கோபால்பூருக்கு தெற்கே 580 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது மெதுவாக கிழக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் அதன் தீவிரத்தை இழந்து, படிப்படியாக வலுவிழக்கு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement