கால்நடை மருத்துவ கல்லூரி, கால்நடை பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
07:29 PM Jan 23, 2025 IST
|
Murugesan M
தலைவாசல் அருகே கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
Advertisement
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கூட்ரோட்டில் கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆவின் பாலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கால்நடை மருத்துவக் கல்லூரி, கால்நடை பூங்கா வளாகம் மற்றும் அலுவலகத்தில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
Advertisement
இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட போலீசார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
Advertisement
Next Article