கிராண்ட் மாஸ்டர் குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்டோருக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு!
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்-க்கு கேல் ரத்னா விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
அதேபோல் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவித்துள்ள மத்திய அரசு, இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்-க்கும் கேல் ரத்னா விருது அறிவித்துள்ளது.
மேலும், பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்ற பிரவீன் குமாருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்தை சேர்ந்த பாரா பாட்மின்டன் வீராங்கனைகளான துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சுமதி சிவன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படும் என அறிவித்துள்ள மத்திய அரசு. இவர்களுக்கான விருது வழங்கும் விழா வரும் 17ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் என அறிவித்துள்ளது.