கிராமப்புற வளர்ச்சியில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது - பிரதமர் மோடி பேச்சு!
முந்தைய ஆட்சியாளர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
டெல்லியில் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை கிராமீன் பாரத் மகா உற்சவம் நடைபெறுகிறது. இதனை தொடங்கி வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, இந்நிகழ்வு இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை மேம்படுத்தும் என தெரிவித்தார்.
கிராமப்புற இந்தியாவுக்கு சேவை செய்வதில் மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாக கூறிய அவர், முந்தை ஆட்சியாளர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தவில்லை என குற்றஞ்சாட்டினார்.
மேலும், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார். "2014 முதல், கிராமப்புற வளர்ச்சியில் சேவை செய்வதில் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.