கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை - விமான கட்டணம் உயர்வு!
05:05 PM Dec 21, 2024 IST | Murugesan M
கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறையால் விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளன.
சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி மற்றும் கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமான டிக்கெட்டின் விலை 5 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
Advertisement
குறிப்பாக, சென்னை - தூத்துக்குடி விமான கட்டணம் 4 ஆயிரத்து 796-ல் இருந்து 14 ஆயிரத்து 281 ஆகவும், சென்னை - திருச்சி விமான டிக்கெட் கட்டணம் 2 ஆயிரத்து 382-ல் இருந்து 14 ஆயிரத்து 387 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, சென்னை - மதுரை விமான டிக்கெட் கட்டணம் 4 ஆயிரத்து 300-ல் இருந்து 17 ஆயிரத்து 695 ஆகவும் உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும், சென்னையில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், தாய்லாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணமும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
Advertisement