For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

குடியரசு தின விழா - கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இலவச அனுமதி!

08:30 PM Jan 26, 2025 IST | Sivasubramanian P
குடியரசு தின விழா   கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இலவச அனுமதி

குடியரசு தின விழாவை முன்னிட்டு, கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டது.

வனத்துறைக்குட்பட்ட பில்லர் ராக், குணா குகை, பைன் மரக்காடுகள் மற்றும் மோயர் பாய்ண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

ஆனால், பேரிஜம் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், அங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக, வனத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இன்று இலவச அனுமதி வழங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் வருகை தந்து இயற்கை காட்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement