குடியாத்தம் அருகே பூட்டிய வீட்டில் 2 நாட்களாக மயங்கி கிடந்த மூதாட்டி - பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பூட்டிய வீட்டில் 2 நாட்களாக மயங்கி கிடந்த மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
நடுப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி - வடிவாம்பாள் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ராமசாமி உயிரிழந்த நிலையில் இருமகள்களும் திருமணமாகி சென்னை, பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.
இதனால் வடிவாம்பாள் தனது இல்லத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக செல்போனில் தொடர்புகொண்டபோது வடிவாம்பாள் எடுக்காததால் சந்தேகமடைந்த மகள்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள் பக்கமாக பூட்டியிருந்த வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தவறி விழுந்து லேசான காயத்துடன் 2 நாட்களாக வடிவாம்பாள் மயங்கி கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது