கும்பமேளா கொண்டாட படையெடுக்கும் வட மாநில தொழிலாளர்கள்!
கும்பமேளா கொண்டாடுவதற்காக வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் திருப்பூர் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பெண்களும் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர்.
பொங்கலுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டதாலும், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கொண்டாடப்படுவதாலும் வடமாநில தொழிலாளர்கள், திருப்பூரில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
குறிப்பாக திருப்பூரில் இருந்து தன் பாத் செல்லும் ரயில், டாடா நகர் செல்லும் ரயிலில் வடமாநில தொழிலாளர்கள் முண்டி அடித்துக் கொண்டு ஏறி சென்றனர். சாதாரண பெட்டிகளிலும் ஸ்லீப்பர் பெட்டிகளிலும் நிரம்பி வழிந்ததால், பெண்கள் ரயில் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.