For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

குறைந்த ஈர்ப்பு விசையில் தாவரத்தின் வளர்ச்சி - விண்வெளியில் முளைத்த காராமணி விதைகள்!

11:15 AM Jan 05, 2025 IST | Murugesan M
குறைந்த ஈர்ப்பு விசையில் தாவரத்தின் வளர்ச்சி   விண்வெளியில் முளைத்த காராமணி விதைகள்

குறைந்த ஈர்ப்பு விசையில் தாவரத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற பரிசோதனைக்காக இஸ்ரோவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் வெற்றிகரமாக முளைத்துள்ளன.

இஸ்ரோவின் PSLV - சி60 ராக்கெட் மூலம் 2 செயற்கைக் கோள்கள் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து டிசம்பர் 30-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. தற்போது பூமியில் இருந்து 500 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன.

Advertisement

இந்நிலையில் குறைந்த ஈர்ப்பு விசையில் தாவர வளர்ப்பு சோதனை முயற்சியாக விண்கலத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட 8 காராமணி விதைகள் முளைவிட்டுள்ளன.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில், விண்வெளியில் வாழ்க்கை துளிர்க்கிறது எனவும் விதைகளில் இருந்து விரைவில் இலைகள் வெளியேறும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement