செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

குவியும் குற்றச்சாட்டுகள் : புதிய ராணுவ அமைச்சர் தேர்வில் கடும் சர்ச்சை!

08:00 PM Jan 28, 2025 IST | Murugesan M

நிதி முறைகேடு, குடிப் பழக்கம், தவறான நடத்தை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முன்னாள் ராணுவ வீரரும், FOX NEWS தொலைக்காட்சியின் தொகுப்பாளருமான Pete Hegseth பீட் ஹெக்சேத், அமெரிக்காவின் பாதுகாப்பு துறை அமைச்சராக சென்ட் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறார். ராணுவ அமைச்சராக அதிபர் ட்ரம்ப்பால் நியமிக்கப் பட்ட பீட் ஹெக்சேத், பெரும் சர்ச்சைகளுக்கு இடையில், தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவமான அமெரிக்க இராணுவத்தை வழிநடத்தும் தலைமை பொறுப்புக்கு பெரிய அனுபவம் இல்லாத (Pete Hegseth )பீட்ஹெக்சேத்தை அதிபர் ட்ரம்ப் நியமனம் செய்தபோதே கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த செனட் வாக்கெடுப்பில், அமெரிக்காவின் ராணுவ அமைச்சராக, Pete Hegseth பீட் ஹெக்சேத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Advertisement

அமெரிக்க ராணுவத் துறையில் சுமார் மூன்று மில்லியன் ஊழியர்கள் பணி புரிகின்றனர். கிட்டத்தட்ட 849 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இராணுவத்துக்காக ஒதுக்கப் படுகிறது.

இவ்வளவு பெரிய பொறுப்புக்குப் பொறுப்பில்லாத ஒருவரா எனக் குடியரசு கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமெரிக்க ராணுவத்துக்கு "போர்வீரர் கலாச்சாரத்தை" கொண்டு வருவதாக Pete Hegseth உறுதியளித்த போதும், அவரது நடத்தை, தகுதி, பாலியல் முறைகேடு,நிதி முறைகேடு,மற்றும் சர்ச்சைக்குரிய கடந்த காலம் குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பினர்.

கூடுதலாக, Pete Hegseth-ன் முன்னாள் மைத்துனர் சார்பில், அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் குடும்ப வன்முறை ஆகிய குற்றச்சாட்டுக்களுடன் சத்தியப் பிரமாணப் பத்திரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

மிட்ச் மெக்கானெல் (Mitch McConnell), லிசா முர்கோவ்ஸ்கி (Lisa Murkowski), சூசன் காலின்ஸ் (Susan Collins) ஆகிய மூன்று குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே பீட்ஹெக்சேத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோனி எர்ன்ஸ்ட், நியமனத்துக்கு எதிராக முதலில் இருந்தாலும், வாக்கெடுப்பின் போது Pete Hegseth க்கு ஆதரவாகவே வாக்களித்தார்.

மேலும், 47 ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களும் பீட்ஹெக்சேத்துக்கு எதிராக வாக்களித்தனர். ஆதரவு வாக்குகளும், எதிர்ப்பு வாக்குகளும் சமமாக இருந்தன.

இப்படி, வாக்கெடுப்பு சமமான நிலையில், துணை அதிபர் JD Vance தனது வாக்கை செலுத்தி, பீட் ஹெக்சேத்தை வெற்றி பெற வைத்திருக்கிறார்.

முன்னதாக, ராணுவ அமைச்சராக ஹெக்சேத்தின் தகுதிகள் என்ன ? என்று எழுப்பிய கேள்விக்கு, போர், மரணம், தகுதி, தரம் மற்றும் தயார்நிலை. அதுதான். தமது வேலை என்றும், பாதுகாப்புத் துறையின் கவனத்தை அமெரிக்க ராணுவத்தின் வலிமைக்கு திரும்பச் செய்வதாக உறுதியளித்தார்

ஹெக்சேத்தின் கடந்த கால அறிக்கைகளில் உள்ள கருத்துகள் பற்றியும், ஜனநாயகக் கட்சியினர் கேள்விகள் கேட்டனர். குறிப்பாக, இராணுவத்தில் பெண்கள் பணியாற்றத் தகுதியற்றவர்கள் என்ற ஹெக்செத்தின் கருத்துக்கு விளக்கம் கேட்டனர்.

அதற்கு, தனது கவலை போரில் பெண்கள் அல்ல, மாறாக இராணுவத்தில் "தரத்தை" பராமரித்தல் என்று ஹெக்சேத் பதிலளித்தார்.

அமெரிக்காவில் உள்ள இரண்டு இராணுவ வீரர்களுக்கான அமைப்பில் தலைமை பொறுப்பில் இருந்தபோது தான் பீட் ஹெக்சேத் மீது, நிதி முறைகேடு சம்பந்தமான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதற்கும் நாடாளுமன்றத்தில் முறையான விளக்கத்தை பீட் ஹெக்சேத் சொல்லியிருக்கிறார்.

மேலும், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள், பெண்கள் மீதான பார்வைகள் மற்றும் குடிப்பழக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பினர்.

தாம் சரியான நடத்தை கொண்டவர் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட ஹெக்சேத், அதை திருத்திக் கொள்வதாக தனது கிறிஸ்தவ மத நம்பிக்கையின் அடிப்படையில், நடத்தை பற்றிய கேள்விகளுக்கு, உணர்ச்சிகரமான குறிப்புகளுடன் பதிலளித்தார்.

ஹெக்சேத்தின் உறுதிப்பாட்டை பாராட்டிய அதிபர் ட்ரம்ப், கட்சிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, நாட்டுக்கு ஒரு சிறந்த ராணுவ அமைச்சர் கிடைத்துள்ளார் என்று அறிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தில் தரைப்படை அதிகாரியாக பணியாற்றிய 44 வயதான Pete Hegsethக்கு, சிறப்பான ராணுவப் பணிக்காக, இரண்டு வெண்கல நட்சத்திர பதக்கங்கள் வழங்கப் பட்டுள்ளன.

முன்னதாக, பீட் ஹெக்சேத், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபின், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.

2014ம் ஆண்டு முதல் FOX News தொலைக்காட்சியில் "FOX & Friends Weekend"நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் ஹெக்சேத் பணியாற்றியுள்ளார்.

குறிப்பாக LGBTQ முதல் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வரை பல்வேறு விஷயங்களில் ஜனநாயகக் கட்சியினரைக் கடுமையாக தாக்கி பேசிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
Mitch McConnellFEATUREDMAINusadonald trump 2025US ArmyAccumulating accusations: Controversy in the selection of the new army minister!Pete Hegseth
Advertisement
Next Article