கூகுள் மேப் பார்த்து ஒட்டிச் சென்ற கார் சேற்றில் சிக்கியது! - 4 பேர் மீட்பு
04:04 PM Dec 16, 2024 IST | Murugesan M
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கூகுள் மேப் பார்த்து, சேற்றில் சிக்கிய காரில் இருந்து மருத்துவ தம்பதியை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
தருமபுரியில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய 4 மாத கைக்குழந்தையுடன் மருத்துவ தம்பதியினர் பழனிசாமி மற்றும் கிருத்திகா ஆகியோர் காரில் சென்றுள்ளனர். காரை கிருத்திகாவின் தம்பி பாவேந்தர் என்பவர் கூகுள் மேப் பார்த்தபடி ஓட்டிச் சென்றார்.
Advertisement
அப்போது, ஒட்டன்சத்திரம் வழியாக பழனிக்கு செல்ல ஒரு மண் சாலையை கூகுள் மேப் காட்டி உள்ளது. இதன் வழியாக சென்றபோது கார் சேற்றில் சிக்கிகொண்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் காரில் இருந்தவர்களை பத்திரமாக ர்களை மீட்டனர்.
Advertisement
Advertisement