கூட்டணி கட்சிகளையும் மிரட்ட தொடங்கியுள்ள முரசொலி - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருந்தத முரசொலி தற்போது கூட்டணி கட்சிகளையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளளார்.
Advertisement
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருப்பை பார்த்து ஸ்டாலினும் பயப்பட ஆரம்பித்துவிட்டாரா என்று தெரியவில்லை. ஸ்டாலின் கருப்பை பார்த்து பயப்படுகிறாரே என வீரமணி அவர்களை தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல், அவர்கள் ஆட்சி நிலை எப்படி இருக்கிறது. கருப்பு துப்பட்டாவை கருப்பு கொடியாக காட்டிவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சுகிறார்களோ என்னவோ? என்றும் தமிழிசை கூறினார்.
முரசொலி எதிர்க்கட்சிகளை தான் மிரட்டிக் கொண்டிருந்தது. இன்று கூட்டணி கட்சிகளையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
கூட்டணியில் இருப்பவர்கள் எந்த கருத்தும் கூறக்கூடாது என திமுக நினைப்பதாகவும், திருமாவளவன் ஏதாவது கூட்டத்திற்கு போகலாம் என நினைத்தால் ஸ்டாலின் அழைத்து போகக்கூடாது என கூறுவதகாவும் தமிழிசை தெரிவித்தார்.
திமுக கூட்டணி கட்சிகளே திருப்தியற்ற சூழ்நிலையில் உள்ளதாகவும், 2026 தேர்தலி திமுக கூட்டணி உடையும் என தமிழிசை தெரிவித்தார்.