கெஜ்ரிவால் இல்லம் முன்பு பாஜக போராட்டம்!
09:43 AM Dec 17, 2024 IST | Murugesan M
டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன், பாஜகவைச் சேர்ந்த மகிளா மோர்ச்சா அமைப்பினர் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம் ஆத்மியின் 'மகிளா அதாலத்தில்' உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் ஆகியோர் இடம் பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
Advertisement
பாஜக எம்.பி.க்கள் கமல்ஜீத் செராவத் மற்றும் பன்சூரி ஸ்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பெண்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்ட நபர்களை கெஜ்ரிவால் தனது கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Advertisement
Advertisement