கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை - தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
12:57 PM Dec 19, 2024 IST | Murugesan M
கேரளாவில் இருந்து எந்த விதமான கழிவு பொருட்களையும் தமிழகத்திற்குள் கொண்டு வருவது சட்டப்படி குற்றம் எனவும், அப்படி கொண்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் தமிழக பகுதிகளில் கொட்டப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், தமிழக - கேரள எல்லைப் பகுதியில் சோதனையை தீவிரப்படுத்த தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் புளியறை பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர்.
Advertisement
பின்னர், செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்த தென்காசி மாவட்ட ஆட்சியர், வரும் காலங்களில் தமிழக - கேரள எல்லைப் பகுதியில் சோதனை மேலும் தீவிரபடுத்தப்படும் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement