செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கேல் ரத்னா, அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்ட வீரர்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

09:57 AM Jan 03, 2025 IST | Murugesan M

கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருது பெற்ற வீரர்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியாவின் விளையாட்டுத் துறையினருக்கு வழங்கப்படுகின்ற மிக உயரிய விருதான, ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா’ விருது பெறுகின்ற, ‘உலக செஸ் சாம்பியன்ஷிப்’ பட்டம் பெற்ற, தமிழகத்தை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரரான குகேஷ்
அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்திய ஆண்கள் ஹாக்கி அணித் தலைவர் ஹாக்கி வீரர் harmanpreet
அவர்கள், ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை  மனு பாக்கர்  மற்றும் பாரா தடகள வீரரான ப்ரவீன் குமார் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

இதேபோல் அவர் விடுத்துள்ள மற்றொரு பதிவில், 2024-ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்கள் வென்ற தமிழக வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் , நித்யஶ்ரீ சுமதி சிவன் , மனிஷா ராமதாஸ்  ஆகியோருக்கு, விளையாட்டு வீரர்களுக்கான ‘அர்ஜூனா விருது’ வழங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதுடன், மூன்று வீராங்கனைகளுக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், நாடு முழுவதும் இவ்விருது பெறுகின்ற அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கும்,  வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன் என எல்.முருகன்  தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Arjuna AwardsHarmanpreetKhel RatnaKukeshMAINmanu bhakerMinister L. Murugan greetings
Advertisement
Next Article