கொடைக்கானல் கூக்கால் ஏரி அருகே செந்நாய் நடமாட்டம் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!
04:58 PM Jan 18, 2025 IST
|
Sivasubramanian P
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள கூக்கால் ஏரி அருகே நரி மற்றும் செந்நாய்கள் நடமாட்டம் உள்ளதால், ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
அண்மையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்சி வெளியானது. அதில், தண்ணீர் அருந்துவதற்காக சென்ற இரண்டு மான்களை, நரி மற்றும் செந்நாய்கள் கூட்டம் துரத்தி துரத்தி வேட்டையாட முயன்றுள்ளது.
ஆனால், அந்த மான்கள் இரண்டும் நல்வாய்ப்பாக தப்பியது. . இந்நிலையில், சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisement
Advertisement
Next Article