'சங்கி' என்றால் நண்பன், 'திராவிடன்' என்றால் திருடன் - சீமான் விளக்கம்!
05:30 PM Dec 03, 2024 IST | Murugesan M
சங்கி என்றால் நண்பன், திராவிடன் என்றால் திருடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
Advertisement
ஹெச். ராஜா அவதூறு பேசிவிட்டார் என கூறுவதை விடுங்கள். அதைவிட வலைத்தளங்களில் அவதூறு பரப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
என்னை தனிப்பட்ட முறையில் சங்கி என கூறுகின்றனர். சங்கி என்றால் நண்பன் என புராண காலங்களில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Advertisement
சங்கி என்றால் நண்பன் என்றும், திராவிடன் என்றால் திருடன் என்று பொருள்படுவதாகவும் அவர் கூறினார். தமிழ் மக்கள் மற்றும் மிழ் இனத்தை மறைத்து திராவிடன் திராவிடன் என சிலர் கூறி வருவதாகவும் சீமான் தெரிவித்தார்.
Advertisement