சட்டப்பேரவைக்கு ஆளுநர் வந்தபோது அதிமுகவினர் நெருக்கடி கொடுத்தனர் - சபாநாயகர் குற்றச்சாட்டு!
சட்டப்பேரவைக்கு ஆளுநர் வந்தபோது அதிமுகவினர் நெருக்கடி கொடுத்ததாக சபாநாயகர் குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து பேசிய அவர், ஆளுநர் வந்தபோது அதிமுகவினர் பாதகைகளை ஏந்தி வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார். சபாநாயகரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.
ஆளுநர் உரையின்போது அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சித்ததாகவும், திமுகவும் இதே மரபை பலமுறை கையாண்டுள்ளதாகவும், எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் கூறினார்.
ஆனால், இதனை மறுத்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் வரும்போது அதிமுக நடந்துகொண்டதுபோல் தாங்கள் எப்போதும் நடந்துகொண்டதில்லை என தெரிவித்துள்ளார். இதனிடையே முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.