சனாதன தர்மம் அனைவரையும் சமம் என்கிறது! - ஆளுநர் ஆர்.என். ரவி
04:51 PM Jan 13, 2025 IST | Murugesan M
சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் பட்டியல் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம் சாட்டி உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
Advertisement
அப்போது கூட்டத்தில் பேசிய அவர்,
சனாதன தர்மம் அனைவரையும் சமம் என்கிறது என தெரிவித்தார். சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார்.
Advertisement
நாம் அனைவரும் வள்ளலாரை ஏற்று அனைவரையும் சமமாக பார்த்தால்தான் சமூகநீதி சரியாக இருக்கும் எனவும் அவர் கூறினார். மேலும், நாடு முழுவதும் வள்ளலாரை கொண்டு செல்வதுடன், பள்ளி பாட புத்தகங்களிலும் வள்ளலார் குறித்த குறிப்புகளை சேர்க்க வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
Advertisement