சபரிமலையில் அலைமோதும் பக்தர் கூட்டம் - 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. மண்டல பூஜையை போன்றே மகர விளக்கு பூஜைக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வண்ணம் உள்ளதால், ஆன்லைன் மூலம் நாள்தோறும் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் 10 ஆயிரம் பேரையும் தரிசனம் செய்ய தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது.
புத்தாண்டையொட்டி ஒரே நாளில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், பக்தர்களின் வருகை ஒரு லட்சத்தை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் 10 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருவதாகவும், வரும் 16ஆம் தேதி வரை மகர விளக்கு தரிசனத்திற்னான ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்துவிட்டதாகவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.