சபரிமலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே செயல்படும் தபால் நிலையம் திறப்பு!
ஆண்டிற்கு ஓரு முறை மட்டுமே செயல்படும் சபரிமலை தற்காலிக தபால்நிலையம் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ஐயப்பனுக்கு லெட்டர் போட்டு பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சபரிமலையில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜை நேரங்களில் மட்டும் தற்காலிக தபால்நிலையம் ஆயிரத்து 963ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இதைத் தொடர்ந்து ஐயப்பன் படம் மற்றும் 18 படிகளுடன் கூடிய முத்திரை ஆயிரத்து 974 ம் ஆண்டு அமலுக்கு வந்தது.
மண்டல, மகரவிளக்கு பூஜை நடைபெறும் காலத்தில் மட்டுமே இந்த தபால் எண் செயல்பாட்டில் இருக்கும். 62 நாட்களுக்கு பிறகு இந்த அஞ்சல் குறியீட்டு எண் செயலிழப்பு செய்யப்படும்.
இதனைதொடர்ந்து அஞ்சல் முத்திரை, பத்தனம்திட்டா அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலக லாக்கரில் வைத்து பாதுகாக்கப்படும். சபரிமலைக்கு ஆறு எட்டு ஒன்பது ஏழு ஒன்று மூன்று என்ற தனி பின்கோடும் உள்ளது. இந்த நிலையில், ஐயப்பனிடம் குறையை சொல்ல லெட்டர் அனுப்புவதற்காக தபால் கவர்களை வாங்கிச் செல்ல திரளான பக்தர்கள் குவிந்தனர்.