சபரிமலை மாளிகைபுரத்தம்மன் கோயிலை சுற்றி தேங்காய் உருட்ட தடை - கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!
சபரிமலை மாளிகைபுரத்தம்மன் கோயிலை சுற்றி பக்தர்கள் தேங்காய் உருட்டுவதற்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன் எஸ்.முரளி கிருஷ்ணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாளிகைபுரத்து அம்மன் கோயிலை சுற்றி தேங்காய் உருட்டுவதையும், கோயிலை சுற்றி மஞ்சள் பொடி தூவுவதையும் அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த ஐதீகம் சபரிமலையில் இல்லை என்று கோயில் தந்திரி தெளிவுபடுத்தி உள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பாக பக்தர்கள் அறியும் வகையில் ஒலிபெருக்கியில் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சபரிமலை 18 -ம் படி மற்றும் கோயில் சுற்றுப்புறங்களில் தேவசம் போர்டு அனுமதி இன்றி போட்டோ மற்றும் வீடியோ பதிவு செய்யவும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.