For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சமூக ஆர்வலர் கொலை! : அண்ணாமலை கண்டனம்!

10:07 AM Jan 20, 2025 IST | Murugesan M
சமூக ஆர்வலர் கொலை    அண்ணாமலை கண்டனம்

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

Advertisement

கனிமவளக் கொள்ளை தொடர்பான புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஜெகபர் அலியை பலி கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்று பாடுபட்டவர் உயிரை எடுக்கும் அளவிற்கு தமிழகத்தில் சமூக விரோதிகள் மற்றும் கொள்ளையர்களுக்கான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து மோசமான முன்னுதாரணத்தை திமுக ஏற்படுத்தி உள்ளதாகவும் விமர்சித்தள்ளார்.

Advertisement

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும் கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்று நினைத்தால் மிக மோசமான விளைவை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் எனவும் அண்ணாமலை எச்சரித்துள்ளார்..

Advertisement
Tags :
Advertisement