செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சமூக ஆர்வலர் கொலை : நால்வருக்கு பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

12:47 PM Jan 20, 2025 IST | Murugesan M

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடியவரை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திருமயம் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கனிமவள கொள்ளைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி விபத்தில் பலியானதாக கூறப்பட்டது.

இது குறித்து திருமயம் போலீசார் முதலில் விபத்து வழக்காக பதிவு செய்த நிலையில், ஜகபர் அலி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து திருமயம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மேலும், உயர்நீதிமன்ற கிளை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் ஜகபர் அலியின் மனைவி அளித்த புகாரின்பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஜகபர் அலி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.

கொலையில் தொடர்புடைய குவாரி உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கொலை வழக்கில் தலைமறைவாகியுள்ள ராமையா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய நால்வருக்கும் பிப்ரவரி 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி திருமயம் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Tags :
Court CustodyMAINSocial activist murderedtamil nadu news
Advertisement
Next Article