சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ஏன்? - அஸ்வின் விளக்கம்!
தனிப்பட்ட காரணங்களுக்காக, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது, ஓய்வு குறித்து, அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ஓய்வுக்கான காரணம் குறித்து விரைவில் விளக்கம் அளிப்பேன் என்று தெரிவித்தார்.
அடுத்து ஏதும் திட்டமில்லை என்றும், அடுத்த பயணத்தை இனிமேல் தான் துவங்க வேண்டும். என்றும் அவர் கூறினார். . கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இருக்கும். . சி.எஸ்.கே., அணிக்காக என்னால் முடிந்த வரை விளையாடுவேன் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, சென்னை மேற்கு மாம்பாலத்தில் உள்ள போஸ்டல் காலனியில் உள்ள வீட்டிற்கு வருகை தந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நெற்றியில் திலகமிட்டு உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், அஸ்வினை அவரது தந்தை ரவிச்சந்திரன் ஆரத்தழுவி முத்தமிட்டு வரவேற்றார்.