சர்வதேச மன்றங்களில் இந்தியா தலைமைப் பதவிகளை வகிக்கிறது - குடியரசு தலைவர் உரை!
ஒரே நாடு ஒரே தேர்தல்' மூலம் நிர்வாகத்தில் சீரான தன்மையை கொண்டு வர முடியும் என்றும், அரசின் கொள்கை முடிவுகள் முடக்கப்படாமல் தடுக்க முடியும் எனவும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
Advertisement
இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது, நமது விவசாயிகள் கடுமையாக உழைத்து, உணவு உற்பத்தியில் நம் நாட்டை தன்னிறைவு பெற்றதாக மாற்றியதாகவும், நமது உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறையை மாற்ற நமது தொழிலாளர்கள் அயராது உழைத்ததாகவும் குறிப்பிட்டார்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் அபார முயற்சிகளால், இந்தியாவின் பொருளாதாரம் இன்று உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார்.
மேலும், சர்வதேச மன்றங்களில் இந்தியா தலைமைப் பதவிகளை வகிக்கிறது என்றும், நமது அரசியலமைப்பு இல்லாமல் இந்த மாற்றம் சாத்தியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை நவீன காலத்தில் நாம் கற்றுக்கொண்ட தத்துவ கருத்துக்கள் அல்ல; அவை எப்போதும் நமது நாகரிக பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் நிர்வாக நிலைத்தன்மையை ஊக்குவிக்கும், நிதிச்சுமையைக் குறைக்கும் என்றும், இதனால் அரசின் கொள்கை முடிவுகள் முடக்கப்படாமல் தடுக்க முடியும் எனவும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.