செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அண்ணா பல்கலை வழக்கில் தொடர்புடைய "சார்கள்" யாரென்று தெரியும் - அண்ணாமலை

06:00 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரனுக்கு தொடர்பான "சார்கள்" யாரென்று தனக்கு தெரியும் எனவும், போலீசார் வெளியிடாத பட்சத்தில் அந்த தகவலை தான் வெளியிடுவேன் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலை. வழக்கில் ஞானசேகரன் உடன் சில காவல்துறையினருக்கு தொடர்பு உள்ளதாகவும், ஞானசேகரன் உடன் யாரெல்லாம் பேசினார்கள் என்பதற்கான ஒரு வருட CALL RECORD தம்மிடம் உள்ளதாக தெரிவித்தார்.

அதுதொடர்பான தகவலை போலீசார் வெளியிடாத பட்சத்தில் அவற்றை நான் வெளியிடுவேன் என்றும் அண்ணாமலை கூறினார். பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக பாஜக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள் என்றும்- அண்ணாமலை கூறினார்.

Advertisement

மேலும் சென்னை ஈசிஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் காரில் துரத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த ர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட பெண்களை குறை கூறுவதையே திமுக வேலையாக வைத்திருப்பதாக சாடினார்.

தவறு செய்தவர்கள் திமுகவினராக இருந்தால் பாதிக்கப்பட்டவர்களை குற்றம்சாட்டுவதா என கேள்வி எழுப்பிய அவர், ஈசிஆர் சம்பவத்தில் காவல்துறையினர் பொய் தகவல்களை வழங்குவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

Advertisement
Tags :
Anna UniversityAnna University campusAnna University. BJP state president Annamalaiannamalai pressmeetchennai policeDMKFEATUREDGnanasekaran arrestMAINstudent sexual assaulttamilnadu governmentwho is sir
Advertisement