செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வு - அண்ணாமலை வலியுறுத்தல்!

12:25 PM Jan 10, 2025 IST | Murugesan M

சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

ஆட்சிக்கு வந்ததும், மூன்று லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த நான்கு ஆண்டுகளில், வழக்கமான அரசுப் பணித் தேர்வுகளையே முறையாக நடத்தாமல், இளைஞர்களை வஞ்சித்து வருகிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான, சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுகள் நடைபெறாததால், ஒரு ஆண்டு வீணாகியிருக்கிறது. இதனால், இளைஞர்களின் வயது உச்ச வரம்பு பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

போதுமான அளவில், காவல்துறையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படாததால், காவல்துறையினர் மீதான பணிச்சுமை அதிகரிப்பதோடு, போதுமான அளவு காவலர்கள் இல்லாததால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, குற்றங்களும் அதிகரித்திருக்கின்றன.

எனவே, 2025 ஆம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வில், இளைஞர்களுக்கு, 2024 ஆம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும், தேர்வுகளுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.

Advertisement
Tags :
annamalaiDMK governmentMAINSecond Class Constable examinationsSub-Inspector examTamil Nadu BJP State President Annamalai
Advertisement
Next Article