சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு கட்டணமில்லா சிகிச்சை - விரைவில் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என நிதின் கட்கரி அறிவிப்பு
09:37 AM Jan 09, 2025 IST | Murugesan M
சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம், மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம் சண்டிகரில் கடந்த ஆண்டு மாா்ச்சில் தொடங்கப்பட்டது. பின்னா், அத்திட்டம் 6 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
Advertisement
இந்த திட்டத்தின்கீழ் விபத்துக்கு பிறகு முதல் 7 நாட்களுக்கு ஒரு நபருக்கு அதிகபட்சமாக 1 லட்சத்து 50 ஆயிரம் வரை கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த திட்டம் மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement