மக்களின் ஆசி பாஜகவுக்கு உள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்!
நாடு முழுவதும் மக்களின் ஆசி பாஜகவுக்கு உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பின்னர் பேசிய அவர், அனைத்து துறைகளையும் வளர்ச்சி காணச் செய்து, மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதே பாஜக வின் ஒரே நோக்கம் என்று கூறினார்.
மீனவ குடும்பங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் கொள்கைகளை வகுத்து பாஜக கூட்டணி முழு வீச்சில் செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
முன்னதாக விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து விழா அரங்கம் நோக்கி காரில் பயணித்த பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சாலையின் இரு புறங்களிலும் கூடியிருந்த தொண்டர்களும், மக்களும் பிரதமர் மோடியை நோக்கி உற்சாகமாக கையசைத்தும், மலர்களைத் தூவியும் வரவேற்றனர்.