சிங்கப்பெருமாள் கோவில் பாடலாதிரி நரசிம்ம பெருமாள் ஆலய கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
06:45 PM Nov 28, 2024 IST | Murugesan M
செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள பாடலாதிரி நரசிம்ம பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிங்கப்பெருமாள்கோயிலில் எம்பெருமான் நரசிம்மருக்கு சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவ மன்னர்களில் ஒருவரான முதலாம் நரசிம்ம
மன்னனரால் மலையைக் குடைந்து, குடைவரைக் கோயிலாக இத்தலத்தை உருவாக்கி உள்ளதாகவும், மேலும் விஜயநகர கால மன்னர்களால் முன் மண்டபங்கள் கட்டப்பட்டதாகவும் தொல்லியல் வரலாறு கூறுகிறது.
Advertisement
இந்த திருத்தலத்தின் குடமுழுக்கு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது., முன்னதாக கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புனித நீர் கோயில் கலசத்தில் ஊற்றப்பட்டது. இதனையடுத்து, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement